தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் எரிமேடை மற்றும் காத்திருப்போர் நிழல் கூடம் எதுவுமில்லாத நிலையில் சுடுகாட்டை சுற்றி முட்புதர்களும் செடிகளும் அடர்ந்து கிடக்கின்றன அப்பகுதியை சார்ந்த ஆதிதிராவிட சமுதாய மக்கள் ஒவ்வொரு இறப்பின் போதும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் பல தடவை புகார் கூறியும் செவி சாய்க்காமல் கண்டும் காணாமல் இருக்கின்றனர் இந்த அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது இன்று கல்லறை திருநாள் அன்று கூட இறந்தவரை வழிப்பட அவரது உறவினர்கள் சிரமப்பட்டு வரும் நிலை உள்ளது பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என பகுஜன் சமாஜ் கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பா மகேந்திரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்