தேனி திமுக பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் எம்பி தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் திமுக கட்சி அலுவலகத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு போடி நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்
போடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நேரு பாண்டியன் பங்கேற்று பி எல் ஏ 2 பி. எல் ஏ சி மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல் நீக்கம் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை திமுக நிர்வாகிகளுக்கு வழங்கி வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் தமிழகத்தில் 236 க்கு 236 தொகுதிகளும் வென்று மீண்டும் தமிழக நிரந்தர முதல்வராக மு க ஸ்டாலின் அவர்களை அமர வைக்க அயராது திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் அடிபட்ட தொண்டர்கள் பாடுபட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்
இந்த கூட்டத்தில் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகர்மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். லட்சுமணன் தேனி திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப் கான் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் பி ஐயப்பன் வடக்கு ஒன்றிய செயலாளரும் தேனி ஒன்றிய குழு பெருந்தலைவருமான எம் சக்கரவர்த்தி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி பேரூராட்சி மன்ற தலைவர்கள் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் மாவட்ட பிரதிநிதிகள் கே முருகேசன் பஷீர் அகமது பரணிதரன் நகரத் துணைச் செயலாளர் வெங்கடேஷ் நிர்வாகிகள் குமார் காளிதாஸ் அலமேலு மங்கை உள்ளிட்ட போடி நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்