வலங்கைமான் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சுமார் ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 10-வது வார்டு பகுதியில் வளையல்கார தெருவில் மழைநீர் தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுடி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இதனை அடுத்து பேரூராட்சி மன்ற 10-வது வார்டு உறுப்பினர் ஆனந்த குமார் பெரும் முயற்சியால் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் வெளியேறும் விதமாக 15-வது நிதிக் குழு மானியத்தின் கீழ் சுமார் 210 மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூபாய் 11.50 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் மேல் பரப்பில் சிலாப்புகள் பொருத்தி மக்கள் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.