வெளியூருக்கு கூடுதல் பஸ் இயக்க அறிவுறுத்தல்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னை, கோவை உள் ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான வர்கள் வந்திருந்தனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு வந்திருந்த னர். பண்டிகை முடிந்ததால் வெளியூர்களுக்கு செல்பவர் கள் பலர், மதுரை மாட்டுத்தா வணி பஸ்நிலையத்தில் குவிந்து இருந்தனர். இவர்களின் வசதிக்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தயார் நிலையில் இருந்தன. இந்தநிலையில் இங்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரு டன் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளரும், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வுமான கோ.தளபதி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக போதுமான பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். அவர்களிடம், வெளியூர்களுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பஸ் வசதி செய்யப்பட்டு இருப்பது குறித்து கேட்டு அறிந்தனர். சாதாரண கட்டண பஸ்கள் எவ்வளவு, சிறப்பு கட்டண பஸ்கள் எத் தனை? தற்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் கூடி இருக்கும் பயணிகளுக்கு ஏற்றவாறு பஸ் வசதிசெய்யப்பட்டு உள்ளதா?எனவும் கேட்டறிந்தனர்.
அதற்கு அதிகாரிகள், பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதுமான அளவில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள் ளன என்றனர். அப்போது அமைச்சர், தேவைப்பட்டால் இங்கிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கலாம். பயணிகள் விரை வாக அந்தந்த ஊர்களுக்கு செல்லத் தேவையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *