கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அரிமா சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு மாபெரும் ரத்ததான முகாம்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள எம்.எல்.ஏ நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் சுவாமிமலை லயன்ஸ் சங்கம், குடந்தை ரத்த தானம் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 9-ம் ஆண்டு மாபெரும் ரத்த தான முகாம் எம்.எல்.ஏ நர்சரி பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் எம்.எல். ஏ பள்ளியின் தாளாளர் அப்துல் மாலிக் ,செயலாளர் முஹமத் தலைமை வகித்தனர்.
இதில் சுவாமிமலை லயன்ஸ் சங்கத் தலைவர் மீரா. சிவசங்கரன் ,செயலர்கள் செந்தில்குமார், வெங்கடேசன் பொருளாளர் துரை ,இவாஸ் சங்கத் தலைவர் ஜாகிர் உசேன், முஹம்மது இத்ரிஸ் மருத்துவர்கள் இர்ஃபான், சஃபான் ,பக்கீர் முஹம்மத்,மன்சூர், பக்ருதீன் மற்றும் குடந்தை ரத்ததான டிரஸ்ட் அறங்காவலர் கராத்தே பஷீர் ஆகியோர் கலந்துகொண்டு இரத்ததான முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இம்முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
ரத்ததானம் வழங்கினர்.