கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
வெனிசுலாவில் நடைபெறும் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க சிபிஎம் எம்பியை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்
எம் .எச் .ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை …
அதிகரிக்கும் பாசிசத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கத் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெறும் உலக நாடாளுமன்ற அமைப்பில் பங்கேற்க கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்வி.சிவதாசனுக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
வெனிசுலா நாட்டில் உலக நாடாளு மன்ற மன்ற அமைப்பு மாநாடு நவம்பர் 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது.
உலகில் அதிகரிக்கும் பாசிசத்தை ஒற்றுமையாக எதிர்கொள்வது என்பதே பாசிச எதிர்ப்புமாநாட்டின் விவாதப் பொருளாகும். இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பங்கேற்க விடாமல் தடுப்பது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.
பாசிச எதிர்ப்பு என்கிற வார்த்தை ஒன்றிய அரசுக்கு ஒவ்வாத ஒன்றாகத் தெரிகிறதுபோலும். காலம் தாழ்த்தாமல் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாஸ் அவர்களுக்கு அனுமதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.