சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர்நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்கிடவும் சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்கிடவும்,சாலைப்பணியாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டல அளவிலான சங்கொலி முழக்கப் போராட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ராஜா திண்டுக்கல் இரா.மாரி சிவகங்கை நந்தகோபால் பழனி
பரமேஸ்வரன் தேனி கோட்டத்தலைவர் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.
கோட்டச்செயலாளர்கள் மனோகரன் மதுரை,
ராஜா சிவகங்கை,அருள்தாஸ் திண்டுக்கல்,பாலமுருகன் பழனி,
முருகேசன் தேனி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாநிலபொருளாளர் இரா.தமிழ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் நிறைவுரை
யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர்
நீதிராஜா, வாழ்த்துரை வழங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரபோஸ்,அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பரமசிவன்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச்செயலாளர்பாண்டிசெல்வி,தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க மண்டல செயலாளர் முத்துவேல்,கிழக்கு வட்டக்கிளை செயலாளர் சிவசிவகுரும்பன், மற்றும் துரைக்கண்ணன், ரத்தினம், செந்தில்,மாணிக்கம், உள்ளிட்ட
மாவட்ட. வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.