பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த மாதாந்திர ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு…
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவராக தங்கவேல் பதவி வகித்து வருகிறார்
இந்நிலையில் 17 ஊராட்சிகளிலும் பொது மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய உறுப்பினர்கள் 17 பேருக்கு அந்தந்த பகுதியில் நடைபெற உள்ள அடிப்படை பணிகளுக்கான நிதியை ஒதுக்க கோரி பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் ஓன்றிய குழு தலைவர் எடுக்காததால் கடந்த 2023 24 ஆண்டிற்கான நிதியை ஒதுக்காத ஒன்றிய குழு தலைவர் தங்கவேலுவின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற இருந்த மாதாந்திர ஒன்றிய உறுப்பினர் குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நடைபெற இருந்த மாதாந்திர கூட்டம்ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து சக உறுப்பினர்கள் கூறுகையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் அதை முறையாக அடிப்படை பணிகளுக்கு ஒதுக்காமல் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…