தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்ற ராஜபாளையம் ரிதம் சிறப்புப் பள்ளி மாணவி அமலா முதல்-அமைச்சர் கோப்பைக்கான மூளை முடக்குவாதித்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் குமரமணிமாறன் . பள்ளி ஆசிரியர்கள் ஆசியா பெனாசீர் மற்றும் பிலோமினாள் கலந்து கொண்டனர்.