வலங்கைமான் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமசாமி ஆலய பஸ் நிறுத்தத்தில் தொற்று நோய்களை பரப்பும் நிலையில், திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் தொட்டி “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” செய்தி எதிரொலியாக உடனடியாக மூடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஸ்ரீ கோதண்ட ராமசாமி ஆலயத்தின் அருகே உள்ள முக்கிய பேருந்து நிறுத்தமான பகுதியில் திறந்த நிலையில் கழிவு நீர் தொட்டியால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று நேற்று நமது “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” இணையதளம் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக பேரூராட்சி மன்ற சுகாதார மேற் பார்வையாளர் அம்பேத்கர் குமார் உடனடி நடவடிக்கை காரணமாக, ஆலய நிர்வாகிகளால் சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது.
இதனை அடுத்து பொதுமக்கள், பேருந்து பயணிகள், சமூக ஆர்வலர்கள் உடனடியாக செய்தியை வெளியிட்ட “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” இணையதளம், உடனடியாக இறங்கி நடவடிக்கை எடுத்த பேரூராட்சி மன்ற சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் மற்றும் ஆலய நிர்வாகிகளுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.