தர்மபுரி நகர் பகுதியில் குடிபோதையில் சென்டர் மீடியன் மீது, கால் மீது காலை போட்டு படுத்து உறங்கிய நபரால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் வாகனங்களை இயக்கியனர்.
தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து கலெக்டர் ஆபீஸ் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியலில் அட்ரஸ் சிட்டி செய்து கால் மீது காலை போட்டு படுத்து உறங்கி உள்ளார்.
அதேபோல மற்றொரு குடிமகன் தள்ளாடி நடந்து சென்றார். குடி மகன்களின் சேட்டையால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் வாகனங்களை பொறுமையாக இயக்கி சென்றனர். தர்மபுரி நகர் பகுதிகளில் குடிமகன்களின் ஒரு விதமான இதுபோன்ற அட்ராசிட்டி தொடர்ந்து அரங்கேறி வருகிறது.