ஆத்துார் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு – விவசாயிகள் அச்சம்
திண்டுக்கல் ஆத்தூர் அணை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் ஆத்துாரை சேர்ந்த ரவிக்கு சொந்தமான தோட்டவரத்து வாய்க்காலில் சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை பார்த்துள்ளார். இதுபோல் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையால் ஆடு வனப்பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டது. நேற்று அதிகாலை சித்தையன்கோட்டை ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்துள்ளனர்.
மேலும் சில நாட்களாக விவசாயிகளின் தோட்ட காவல் நாய்களும் மாயமாகி வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் தகவலையடுத்து வனத்துறையினர் இரவில் பட்டாசு வெடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்…