திண்டுக்கல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையிலான பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் வணிக நிறுவனத்தினர் பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த இடத்தில் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டால் கட்டிடம் உறுதித் தன்மையற்று போகும் , நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.