எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.
வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் மற்றும் மாநில செயலாளர் ரத்தினம் அண்ணாச்சி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இறுதியாக தெற்கு தொகுதி தலைவர் பாட்ஷா நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.