மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள குராயூறை சேர்ந்த M. மாரிச்செல்வம் இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து தற்போது பணிஇடைநீக்கத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்து வந்த பலரிடம் ஆசை வார்த்தை கூறியும். தனது மகன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளதாகவும். அதை பயன்படுத்தி மத்திய,மாநில அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்து பல லட்சங்கள் மற்றும் நகைகள் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இன்று வரை வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வரும் எம்.மாரி செல்வம்.
பாஜக கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பேற்று முழு நேர அரசியல்வாதியாக சொகுசு கார்களில் கட்சிக்கொடியுடன் பந்தாவாக வலம் வருவதாகவும். மோசடியால் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
இவருடைய மனைவி தமிழக அரசின் அங்கன்வாடியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் தான் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று கூறி.கல்வித் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பல லட்சங்களை சுருட்டியதாக சொல்லப்படுகிறது.
இவர்ரது மகன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அரசு வழக்கறிஞர்(பிபி) ஒருவரிடம் பணியாற்றி வருவதாகவும். சிலரிடம் மத்திய அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும் சொல்லியவருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். இதைவிட கொடுமை ஆட்டோ ஓட்டும் ஒருவரிடம் டிஎஸ்பி வேலை வாங்கி தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக கூறுகிறார்கள்.
இதில் இவர்நேரடியாக பணம் பெறுவதில். தன்னுடன் பணிசெய்யவர்கள் மூலம் மட்டுமே பணம் வாங்குகிறார்.அதுபோல் வாங்கிய பணத்திற்கு விவசாய கடன் வாங்கியதாக எழுதி கொடுத்து விடுகிறார். இது மதுரை திருமங்கலம் பகுதிமட்டும் கிடையாதுதமிழகமுழுவதும் ஒரு குழு செயல்படுகிறது.
இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அரசுஊழியர் புதுக்கோட்டை ரமேஷ் என்பவரை தொடர்பு கொண்டு விபரம் தெரிந்த நீங்கள் குறுக்கு வழியில் போகலாமா என கேட்டதுக்கு பதில் இல்லை இதன் தனுஷ்கோடி என்பவர் மூலம் மாரிசெல்வராஜ் பழக்கம் ஏற்பட்டு பணத்தை இழந்து தற்போது விசேட மூலம் சுமார்₹800000/திரும்ப பெற்றுள்ளார்.
இளைஞர்களை குறி வைத்து. படித்து முடித்து வேலை தேடி வருபவர்களிடம். நீதிமன்றத்தில் வேலையும், மத்திய அரசு வேலையும். பெற்றுத் தருவதாக பேரம் பேசி பல மோசடிகளின் மூலம் பணம் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த மூவரிடமும் பணம் மற்றும் நகை கொடுத்த அப்பாவிகள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொடுத்த பணத்தைக் கேட்டு சில வருடங்களாக திருமங்கலத்தில் உள்ள எம்.மாரிச்செல்வம் இல்லத்திற்கு பல முறை சென்று வருவதாகவும்.
வேலை வாங்கித் தருவதாக அரசு ஊழியர்களகளுக்கு மத்திய அரசில் மாற்றுவதாகவும் இதில் புதுக்கோட்டை ரமேஷ் தமிழக கூட்டுறவு பேங்கில் வேலை செய்பவரை மத்தியில் கூட்டுறவு வங்கிக்கு மாற்றுவதாக வரும் கூறி பணத்தை பெற்றுள்ளார் .திரும்ப தராமலும் தொடர்ந்து. தங்களை ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
இதற்கு இடையே தொடர்ந்து பணம் கேட்டு வரும் சிலரிடம் எம்.மாரி செல்வத்தின் மனைவி முருகேஸ்வரி.
காவல்துறை ஐஜி ஒருவர் தனது உறவினர் என்றும் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி மிரட்டி அனுப்புவதாக கூறப்படுகிறது.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வேலை இன்றியும்,வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக கூறுகின்றனர்.
ஆனால் எதற்கும் அஞ்சாத மோசடி மன்னன் மாரிச்செல்வம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி. இன்று வரை அரசு போக்குவரத்து கழகத்தில் தனக்கான சம்பளம் பெற்று வருவதாகவும் கூறுகிறார்கள் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்.
இதில் பாதிக்கப்பட்டவர் முதல் ஏமாற்றிய துணைபோன அனைவரையும் குற்றவழக்கில் அரசு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் அரசு பெயர்சொல்வது உயர் அதிகாரி பெயர் சொல்லி ஏமாற்றும் குற்றம் தடுக்கப்படும். மேலும் அரசு மக்களிடமும் அரசுஊழியர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.