ராஜபாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியனார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை சிவகுமாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியைகள் பேரணியை நடத்தி வைத்தனர். மாணவிகள் போதையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திகோசமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தென்காசி சாலை காந்தி சிலை ரவுன்டானா வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.