கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் புரட்சித் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்.சேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சாமு. தர்மராஜன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் உறுதிமொழி கேட்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.