வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பாசார் கிராமத்தை சேர்ந்த சேவான் மகன் ஆறுமுகம் ( வயது 70) இவரது மகன் முத்துசாமி (வயது 48) கட்டிட மேஸ்திரி இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவி ஒரு மகன் மூன்று மகள் உள்ளனர்

இந்நிலையில் நேற்றிரவு முத்துசாமி தனது தந்தை ஆறுமுகத்திடம் பிரச்சினை செய்துள்ளார் அதனால் மனம் வெறுத்துபோன தந்தை ஆடு உரிக்கும் கத்தியை எடுத்து சென்று வீட்டின் எதிரில் உள்ள மரத்தின் அடியில் உட்கார்ந்துள்ளார் அங்கும் சென்று முத்துசாமி தந்தையிடம் பிரச்சினை செய்து அடிக்க சென்றதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகன் முத்துசாமி வயிற்றில் குத்தியுள்ளார்
இதில் துடிதுடித்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்
அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்தார்
இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் இறந்த முத்துசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மகனை கொலை செய்த ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது