ராஜபாளையம்
வட்டாட்சியர் அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை கேசா டி மிர் பள்ளி மற்றும் ஜே.சி.ஐ ராஜபாளையம் இணைந்து தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஊர்வலம் நடத்தப்பட்டது.
பேரணியை ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் மரிய பாக்கியம், வட்டாட்சியர் அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள், இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலர் செல்வி, மருத்துவர் ராதா, வைமா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருப்பதி செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு துண்டு பிரசங்கம் வழங்கப்பட்டது.