தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், நவ- 07. தஞ்சாவூர் மாநகர் பாமக மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.
வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் பாரத், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார். பகுதி செயலாளர்கள் மருத்துவக் கல்லூரி ராஜா ராமன், கரந்தை கோபி கண்ணன். ஆகியோர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்திடம், அளித்த புகார் மனுவில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு. தா. அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்தும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.