கோவை வாழ் மக்களை தேடி இயல்,இசை,நாடக நிகழ்ச்சிகளுக்கான புதிய நிரந்தர கான சபா இயல் இசை,நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் நடத்தும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்ரீ மாருதி கான சபா துவங்கப்பட்டது..
சென்னையை அடுத்து தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை உள்ளது..
ஐ.டி.பார்க் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் சென்னைக்கு நிகராக கோவையில் உருவாகி வரும் நிலையில் கோவை வாழ் மக்களிடையே இசை,பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிரந்தரமான சபாக்கள் இல்லாதது கோவை வாழ் மக்களிடையே பெரும் குறையாக இருந்து வந்தது..
இந்நிலையில் இதனை போக்கும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மாருதி திரையரங்கம் புதிய பொலிவுடன் ஸ்ரீ மாருதி சபாவாக உருவாக்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் உலக அளவில் கச்சேரிகள் நடத்துவதில் பிரபலமான, மிருதங்க கலைஞர் மாயவரம் விஸ்வநாதன் மற்றும் ஒலி,ஒளி தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணன் முருகன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் துவங்கப்பட்டுள்ள ஶ்ரீ மாருதி கான சபா துவக்க விழா மங்கள இசையுடன் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக, பூஜ்யஶ்ரீ மாதாஜி வித்தாம்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், சங்கர் குழமங்களின் இயக்குனர் மோகன் சங்கர், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி புதிய சபாவை வைத்தனர்
விழாவில்,தமிழ்நாட்டில் உள்ள முன்னணி இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது..
இந்த தத்ரூப ஒலி,ஒளி அமைப்புடன் கூடிய ஶ்ரீ மாருதி கான சபா அரங்கம் கோவை வாழ் இசை மற்றும் நடனத்துறை கலைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாகவும், மேலும் கோவை வாழ் மக்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஶ்ரீ மாருதி கான சபாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களால் இசை, நடனம் மற்றும் களரி பயிற்று போன்ற மனம் மற்றும் உடல் நலம் பேணும் கலைகள் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக மாதம்தோறும் இசை மற்றும் நடன கச்சேரி அரங்கேற்ற போவதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக அரங்கத்தை முன் பதிவு செய்யவும்,கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளும் விதமாக ஸ்ரீ மாருதி கான சபாவின் இணைய தளம் துவங்கப்பட்டது..