திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் நெல் விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதில் விவசாய உழவுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு பயன்படுத்தப்படும் டீசல் விலை ஏற்றத்தால் தற்போது 1 மணி நேரம் உழவுக்கு 1000 ருபாய் வசூல் செய்யப்படுகிறது.
இதனை விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய டீசல் மோட்டார் மற்றும் உணவு வாகனங்களுக்கு மானிய விலையில் டீசல் தமிழக அரசு வழங்க வேண்டும் நெல்லின் ஆதார விலையை கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.