திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ,35பேர் கைது.
தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அமரன் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் திரைப்படக் காட்சிகளை தடை செய்ய வலியுறுத்தி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை நோக்கி கண்டன பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ் டி பி ஐ கட்சியின் தொகுதி தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில், தாராபுரம் பழைய நகராட்சி அண்ணா சிலை அருகில் இருந்து அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டவாரு திரையரங்கம் நோக்கி பேரணியாக சென்றனர் .
முன்னதாக திரையரங்கின் முன் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
பேரணியாக வந்த எஸ் டி பி ஐ கட்சியினர் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஷ் பாபு தலைமையில், அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி திரைப்படத்தை திரையிட்டுள்ள திரையரங்கம் முன் கண்டன கோஷம் எழுப்பினர் .
கூட்டத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார் எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் நகரத் தலைவர் சையது அபுதாஹிர், உட்பட 35 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர் இச்சம்பவத்தால் தாராபுரம் சர்ச் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது