ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவில் வைத்து ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை சமேத திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. அருள்மிகு ஜடா முனீஸ்வரர் திருக்கோவில் அருள்மிகு மங்கள விநாயகர் ஆலயம் அமைந்துள்ள துரைச்சாமிபுரம் தெரு சாலிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபத்தில் வைத்து தொடங்கிய திருக்கல்யாண வைபோகம் சீர்வரிசை எடுத்து சுமார் 100 சுமங்கலி பெண்கள் நகர்வலம் வந்து முருகப்பெருமானுக்கு சீர்வரிசையை கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானை சமேத திருக்கல்யாண நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் துரைச்சாமிபுரம் தெரு ஊர் தலைவர் காளிமுத்து
கௌரவ தலைவர் மாடசாமி உப தலைவர் சூரிய நாராயணன் செயல் தலைவர் குருசுப்ரமணியன் பொருளாளர்
பசுபதி இராமநாதன் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர். நாட்டாமைகள் குருநாதன் மாரிமுத்து ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்:சாலிய சமுதாய வாலிபர் சங்க தலைவர் சரவணன் மற்றும் பொருளாளர் முத்துராமலிங்கம் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பூஜை களை துவக்கி வைத்தார்கள் சிவ மணிகண்டன் ஜோதிடர் மற்றும் பூசாரி அவர்கள் தலைமை தாங்கி மூன்று புரோகிதர்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சியினை நடத்தி வைத்தார்கள். இரவு 9 மணி அளவில் அனைவருக்கும்
ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோயில் பணியாளர்கள் தயாரித்த திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்களும் குழந்தைகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.