திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோயிலில் உள்ள ரோப் கார் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் ஆண்டு பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரோப்காருக்கு புதிய இரும்பு வடக் கயிறு மாற்றும் பணி நடைபெற்றது. இதற்காக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ.6 லட்சத்தில் 720 மீ. நீள இரும்பு வட கயிறு இணைக்கும் பணி தொடங்கப்பட்டது.