மதுரை வைகை வடகரை சாலையில் பாதாள சாக்கடை தொட்டி மூடி சரியாக மூடப்படாததால் பள்ளத்தில் அரசு பேருந்தின் பின்புற சக்கரம் பள்ளத்தில் சிக்கியது.
மதுரை மதிச்சியம் பகுதியில் வைகை வடகரை சாலையில் தேனியில் இருந்து தேவகோட்டை செல்வதற்காக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது, அப்போது ராமராயர் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வெகு நாட்களாக சேதமடைந்திருந்த பாதாள சாக்கடை தொட்டி மூடி பாரம் தாங்காமல் திடீரென இடிந்ததில் பேருந்தின் பின்புற சக்கரம் பள்ளத்திற்குள் இறங்கியது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி ஆணையர் போக்குவரத்து இளமாறன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை பள்ளத்தை சரியாக மூடப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.