போச்சம்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியில் அஇஅதிமுகவின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வேலம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நாகோஜனஹள்ளி பேரூர் கழக அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நாகோஜனஹள்ளி பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியபோது, கூட்டணிபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் கவலைபட வேண்டும், நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தர்மத்திற்கும் ஞாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள்.
கிராமத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட்டு, எந்த கட்சியையும் சாராதவர்களை இனம் கண்டு, நம் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்து கூறி, அவர்களை நம் இயக்கத்தில் சேர்த்து ஓட்டளிக்க வைக்க வேண்டுமெனவும், வருகின்ற 2026ல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் அரியணையில் ஏற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்த 18 மாதத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டுமெனவும் பேசினார்.
கவுன்சிலர் சுமித்ரா வெங்கடேசன் நன்றியுரையாற்றினார். அதிமுகவின் பொருப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் 500த்தற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.