விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றிட வேண்டும் .
40 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சமையல்கார்கள் என மெத்தம் 255 இந்த சத்துணவு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் காலவரை ஊதியம். குடும்ப நல ஓய்வூதியம். பணிக்கொடை
5 லட்சம் வழங்கிடவும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் வாரிசு அடிப்படையில் ஆண் வாரிசு தாரர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.சாந்தி.இன்பம், முத்துமாரி, ரமணி, வனிதா ஆகியோர் முன்னிலவைத்தனர் மாவட்ட செயலாளர் முத்துச்செல்வம் பேசியபோது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை பயன்படுத்தி வேலை வாங்கிவிட்டு எங்ளை பாதிக்கின்ற அளவில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு உடனடியாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென பேசினார்.