விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இரயில்வே பீடர் சாலையில்
கண்பார்வைக் குறைபாடுள்ள புளியங்குடியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்ற முதியவர் நடைமேடையில் யாசகம் பெற்று, எங்கும் செல்ல முடியாமல் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வாழ்வினை நகர்த்தி வந்த நிலையில் அவருக்கு மறுவாழ்வு வழங்க முதியோர் காப்பகத்தில் சேர்க்க வேண்டி ராஜபாளையத்தை சேர்ந்த
சமூக சேவகர் செல்வகுமார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்தார்


அதனை ஏற்றுக் கொண்டு சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினார்கள். அவ்வலுவலகத்தைச் சேர்ந்த மகாலட்சுமி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சமூகநல அலுவலர் ஷீலா.சமூக ஆர்வலர்கள் செல்வகுமார்.
கண்ணன் ஆகியோர் அன்னை ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம், அடுத்த. சோழபுரம் முறம்பில் உள்ள பொன்னகம் முதியோர் இல்லத்திற்கு சென்று சுந்தர்ராஜனை. அவ்வில்லத்தில் சேர்ப்பதற்கான ஆர்டர் கடிதத்தை கொடுத்து முறைப்படி.சேர்த்தனர்
அங்கு சேர்த்தபின் அந்த முதியவர் தனக்கு இத்தனை காலம் உணவு உடை கொடுத்து பராமரித்து தற்போது இங்கு வந்து சேர்த்த சமூக சேவகர்கள் மற்றும்
மாவட்ட ஆட்சியர் சமூக நலத்துறை அனைவருக்கும் கண்ணீர் மல்க இரு கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *