கோவையை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல் மாவட்டக் கிளையாக செயல்படும் தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நாட்டு பற்றாளான்
பத்திரிக்கை ஆசிரியர் திரு செல்வம் அவர்கள்
தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.
அப்போது கிளை தலைவர் திரு சுகுமாரன் துணை தலைவர் சகோதரி லூர்து மேரி செயலாளர் கீதா உதவிச் செயலாளர் நித்யா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
மாவட்டம் தோறும் இருக்கிற நுகர்வோர் உரிமைகள் நீதிமன்றத்தை நுகர்வோர் அணுகுவது எவ்வாறு என்றும் நுகர்வோருக்கு எப்படி நன்மை செய்வது சம்பந்தமாக கலந்துரையாடல் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.