திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கூக்கால் கிராமத்தில் நன்ணீர் ஏரிக்கு அருகே நீர்நிலை என்று வருவாய் துறையால் முழு ஆதாரத்துடன் அறிவித்த இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் விடுதியினை அகற்றபட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அதனை அகற்றபடாமல் நீண்ட நாட்களாக அகற்றாமலும்,பல முறை புகார் அளித்தும் எவ்வித பதிலும் இல்லை. வருவாய் துறை அறிவித்த அறிவிப்பை காற்றில் பறக்க விட்ட விடுதி உரிமையாளருடன் அரசு அதிகாரிகளின் துணையோடு அகற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
இந்த நீர் நிலை ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன்,அரசு பொது சாலைகளை வெளியூர் முதலாளிகளால் கூக்கால் முதல் எட்டூர் செல்லும் அரசு சாலையை தனியார் நபர்களால் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வருகின்றனர். இதில் சுமார் 6 ஏக்கர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுத்து நிறுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிறக்கு வழித்தடத்தை மீட்டுத்தர வேண்டி அப்பகுதி விவசாய சங்கம் சார்ந்த தலைவர் து.தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளித்தனர்.