செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் திருவிடைமருதூரில் உதவி செயற்பொறியாளர் மின் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா..
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் மின்சாரத்திற்கு புதிதாக உதவி செயற்பொறியாளர் மின் அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி கட்டுமான பணிகள் துவங்குவதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் , பாராளுமன்ற உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.பி செ.ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் பெருந்தலைவர் புனிதா மயில்வாகனன், துணைப் பெருந்தலைவர் சுந்தர. ஜெயபால், மற்றும் மின்சார துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் ,திமுக கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.