கடலூர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கு ஏற்றி அர்ப்பணித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 190 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் பல்வேறு மாவட்டங்களில் 25 புதிய திட்டப்பணிகள் மற்றும் 4 அலுவலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூபாய் 42 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டில் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் 2 அலுவலக கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இவற்றில் கடலூர் மாவட்டத்தில் அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் தரை தளம் 5262 சதுர அடி பரப்பளவில் 300 நபர்கள்அமரக்கூடிய வகையில் உணவுக்கூடமும், முதல் தளம் 5219 சதுர அடிபரப்பளவில் 300 நபர்கள் அமரக்கூடிய வகையில் திருமணக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது போதிய காற்றோட்டமானஇடவசதிகளுடன் மணமகள் அறை, மணமகன் அறை, கழிவறை வசதிகள்மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாலை வசதிகள் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்தரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.கே.நாகராஜபூபதி, செயல் அலுவலர் வெங்டேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *