கோவை

கோட்டக் மகேந்திரா குழு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக லோட்டஸ் பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி திருமதி சந்தோஷி ராஜேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் சந்தோஷி ராஜேஷ்
லோட்டஸ் பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் பல்வேறு சமூகம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் இவரது சமூக பணியை பாராட்டும் விதமாக இவருக்கு கோட்டக் மகேந்திர குழு நிறுவனம் பிராண்ட் அம்பாசிடராக இவரை நியமனம் செய்து கவுரவம் அளித்துள்ளனர்.இதற்கான விழா வடகோவை பகுதியல் உள்ள கோட்டக் மகேந்திர லைஃப் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது இதில் நிறுவனத்தின் அதிகாரிகள் திருமதி சந்தோஷி ராஜேஷ் அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் அங்கீகார சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை வழங்கி கவுரபடுத்தினர்.
வங்கி சேவைகளில் முன்னனி நிறுவனமான கோட்டக் மகேந்திர குழு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ள கோவையை சேர்ந்த தன்னார்வலர் சந்தோஷி ராஜேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *