பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு பகுதியில் ரூ 29 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா :
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வது பகுதியில் ரூ 29 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அடிகல் நாட்டினார். நிகழ்வில் பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், ஆணையாளர் தமிகா சுல்தானா, நகராட்சி பொறியாளர் ராஜேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக் நகர்மன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம், விசிக முன்னாள் தேனி (கி) மாவட்ட செயலாளர் ப. நாகரத்தினம்,
ஒப்பந்ததாரர் ஷீலா மகேந்திரவர்மன் ,நகராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.