வலங்கைமான் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 30.10 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, 11 கிராம ஊராட்சிகளில் திட்டப்பணிகள் தீவிரம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் அதிகமாக உள்ள. மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகை திடல், உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரெகுநாதபுரம் ஆகிய 8 கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 2022-23 ஆம் நிதி ஆண்டில் வலங்கைமான் ஒன்றியத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 11 ஊராட்சிகளிலும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது,
இதன் மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் 30 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் (2024-2025) ஆதிச்ச மங்கலம், ஆவூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் கெட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வலங்கைமான் அடுத்த தெற்கு பட்டம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூபாய் 30 லட்சத்து பத்தாயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செந்தில் மட்டும் பொறியாளர்கள் கட்டுமான பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். வரும் 2025-2026 ஆம் நிதி ஆண்டில் ரகுநாதபுரம் விருப்பாச்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.