ராஜபாளையம்
பி. ஏ. சி எம்,மேல்நிலைப் பள்ளியில். வழிபாட்டு கூட்டத்தில் வைத்து சுமார் 40 மாணவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் மதிப்பிற்குரிய ஜவஹர்லால் நேரு அவர்களின் முக கவசங்களை அணிந்து நம்ம மாமா நேரு என்ற புத்தகத்தை வாசித்து குழந்தைகள் தின விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர். பள்ளியின் தலைமை ஆசிரியர்.மாரிமுத்து தலைமை உரையாற்ற ,
மூத்த கணித ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றிய சிறப்புரை ஆற்றினார்கள். இடைநிலை ஆசிரியர் கே. வெங்கடசுப்பிரமணியன் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் என்று விளக்கவுரை ஆற்றினார்கள்.
பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இளம் செஞ்சிலுவை சங்கம் தேசிய பசுமைப் படையை சேர்ந்த மாணவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள். ஆசிரியர் மாடசாமி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்
குழந்தைகள் தின உறுதிமொழி சுமார் 2500 மாணவர்கள் எடுக்க பள்ளியின் ஆசிரியர்களும் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.