முதன்மைக் கல்வி அலுவலர் கண்டித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப் போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மேல் நிலைப்பளளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆசிரியர்களை ஒருமையில் தகாத வார்த்தையால் பேசும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் கூறியதாவது

கஇன்று முதுமை கல்வி அலுவலர் அவர்களை கண்டிக்கும் விதமாக முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் மணிவாசகம் தலைமையில் இயங்கக் கூடிய அமைப்பாகும்.

தர்மபுரி மாவட்டத்தில் 100ற்க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 1000க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆண்டு ஆய்வின்போது, பள்ளிகளுக்கு செல்லும்போது ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது, ஆசிரியர்களின் பிறப்பை தவறாக பேசுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான அரசு வழங்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்புகளை கணக்கிட்டு அதிக தற்செயல் விடுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களை தனியாக அழைத்து ஒரு மையில்திட்டி வருகிறார் .

இது ஆண்டு தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மனம் புண்படும்படியாக பேசுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு சம்பளம் பெறுகிறாய் ?

இதற்கு பணி செய்கிறாயா?
விருப்பம் இல்லை என்றால் ஓய்வு பெற்று பெற்று செல்லவும் என வற்புறுத்துகிறார்.

மாவட்ட எல்லை பகுதிக்கு பணி மாற்றம் செய்து விடுவேன் என பயமுறுத்துகிறார்.இது போன்ற தொடர்ச்சியாக செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.பல்வேறு முறை அமைப்பின் சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம் .இந்த செயல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

மாநில அமைப்பின் உத்தரவின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதையடுத்தும் முதன்மை கல்வி அலுவலர் எங்களை இதுவரை சந்திக்கவில்லை.தேர்ச்சி சதவீதம் குறைந்து உள்ளது என்பதை கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

பல்வேறு ஆசிரியர்களின் மனக்குமர்ல்ளை இங்கு தெரிவித்ததன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் 100% தேர்ச்சி கொடுப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால் 99 சதவீதம் தேர்ச்சி சதவீதம் கொடுத்தவர்கள் எந்த குடும்பத்தில் பிறந்தவர்கள்?
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *