தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவன அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.