தேவதானப்பட்டி அருகே டி வாடிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டி வாடிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு பெரியகுளம் வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனமான மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.ஜே ஐசக் சி எம் ஐ தலைமை வகித்தார்.

தேனி மாவட்ட தொழில் மையம் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்கள் கே மோகன்ராஜ் பங்கேற்று கிராமப்புற தொழில் குறித்தும் அதன் மேம்பாடு குறித்தும் கிராம மக்களுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் டி வாடிப்பட்டி கே. தங்கராஜ் சில்வார்பட்டி சி. பரமசிவம் எருமலை நாயக்கன்பட்டி எஸ் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேரி மாதா கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜோஜி டிரம் தொட்டு சி.எம். ஐ. கல்லூரி நிதி நிர்வாகி பிரான்சிஸ் பிஜோய் மங்கலத்து சி எம் ஐ வாழ்த்துரை வழங்கினார்கள்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எருமலை நாயக்கன்பட்டி டி. வாடிப்பட்டி சில்வார்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கிராமப்புற தொழில் செய்வது குறித்து விழிப்புணர்வு அடைந்து பயன்பெற்றனர்

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் சில்வார்பட்டி எஸ். வீரபத்திரன் எருமலை நாயக்கன் பட்டி எஸ் பாண்டியராஜ் டி. வாடிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர் இந்துராணி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் சில்வார்பட்டி ஊராட்சி செயலாளர் எஸ் வீரபத்திரன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *