தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில்
மெய்யன்பு அறக்கட்டளை சார்பில், நடத்திய, தெய்வத் தமிழ் இசை விழா தொடக்கம், பெசன்ட் அரங்கில்,நேற்று மாலை  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும், திருமதி.சசிகலா
தேவி நடராஜன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சை முத்தமிழ் முற்றம் நிறுவனத்தலைவர்,
ந. வெற்றியழகன் வாழ்த்துரை வழங்கினார். திருவையாறு இசைக்கல்லூரி, தமிழ்த்தென்றல் இணைத்துறை பேராசிரியர், முனைவர்,கோ. சண்முகவேல்  குத்துவிளக்கேற்றி நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை பேராசிரியர், (ஓய்வு) முனைவர் இராமலிங்கம்  சிறப்புரைஆற்றினார், லிபியாநாட்டைச் சேர்ந்த ஓமாஅல்முக்தார் பல்கலைக்கழக இலக்கியபேராசிரியர்.முனைவர்,ரா.சா.பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது  பாவலர் தமிழன்னை தாசன் அவர்கள் சிறப்பான திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு தனித்துவம் பெற்றதாக சிறப்பு பெற்றிருக்கிறதுஎன்றார். மேலும் அவர் கூறுகையில் திருக்குறளையும், ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும், ஒப்பிட்டு இலக்கியங்கள் மூலமும், ஆராய்ச்சி மூலமாகவும், திருக்குறளின் புகழை உலகுக்கு எடுத்துச் செல்வது  ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் என்றார்.யோகி சுந்தானந்தபாரதி திருக்குறள் உயிர் என்றும், திருவாசகம் தமிழர்களின் இதயம் என்றும், திருமந்திரம் ஆன்மா என்றும் குறிப்பிடுகிறார்.

 இந்நிகழ்ச்சியை  இசையரசி கௌசல்யா குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *