கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தமிழக அரசு கைத்தறி தொழிலை பாதிக்கும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும்,கச்சா பொருள்கள் மானிய விலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும்,கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கும்பகோணத்தில் செய்தியாளர் சந்திப்பில் …
ஏஐடியுசி -யின் மாநில பொதுச் செயலாளர்
எம் .ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில கூட்டம் மாநிலத் தலைவர் மணி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
ஏஐடியுசி- யின் மாநில பொதுச் செயலாளர்
எம். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய மாநில குழுவின் முடிவுகள், தொழிலாளர் நிலமை, எதிர்கால கடமைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது….
தமிழக அரசு உடனடியாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான ஜவுளி ரகங்களுக்கு அரசின் மானிய தொகையை 10 மாதங்களாக வழங்கவில்லை எனவும் அதனை தீபாவளி பண்டிகையின் போது தறிகூலி போனஸ் நெசவாளர்களுக்கு வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி மானிய தொகையை வழங்க வேண்டும் எனவும்,,
தமிழக அரசு கைத்தறி தொழிலை பாதிக்கும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும்,
கச்சா பொருள்கள் மானிய விலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ,தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 6000 ஓவியம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் சந்திரகுமார், தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, கைத்தறி நெசவாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ராஜன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்