கடத்தூர் கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் வெ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். புலவர் நெடுமிடல், புலவர் சிவலிங்கம், புலவர் கோ. மகாலிங்கம், கே.டி.முருகன், சுப்பிரமணி, அருணாசலம், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நூலக அலுவலர் அர. கோகிலவாணி, மாவட்ட நூலக ஆய்வாளர் டி.மாதேஸ்வரி சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து தருமபுரி மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் தலைமையில் ‘நூலகம் செல்வோம்! நூல்கள் கற்போம்!’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் அரங்கநாயகி கண்ணன், தகடூர் சு. தமிழரசன், ஜருகு அலமேலு, வத்தலாபுரம் முருகேசன்,தீ. சண்முகம், நா. நாகராஜ், அ.மணிவண்ணன், மாலதி அனந்த பத்மநாபன், கோகுலக் கண்ணன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
முன்னதாக நூலகர் சி. சரவணன் வரவேற்றார். முடிவில் கா.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். திரளாக வாசகர்கள் கலந்து கொண்டனர்.