ஆரணி நவம்பர் 17.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  பெரணமல்லூர் பக்கத்தில் உள்ள நரியம்பாடி கிராமத்தில் உள்ள  கவன  மலை  ஐயப்ப கோவில் 18 படி கார்த்திகை மாத ஐயப்ப பக்தர்களின் இருமுடி  விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை  அளித்து வரவேற்றார்கள். 

            நரியம்பாடி கிராமத்தில் பல ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் கவனமலை ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவி சிறப்பாக நடத்தி வரும் வரும் பக்தர்கள் குழு 

இந்த ஆண்டு கார்த்திகை ஒன்றாம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டுதல் மற்றும் கார்த்திகை ஒன்று ஐயப்ப படி பூஜை விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களுக்கு பூரண கம்பை மரியாதை அளித்து ஐயப்ப பக்த கோடிகளும் ஊர் பொதுமக்களும் வரவேற்றார்கள் .

கவனமலை அய்யப்ப பக்த சேவ சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா 18 படி பூஜை விழா சிறப்பாக துவக்கி நடத்தப்பட்டது நூற்றுக்கணக்கான பக்த கோடிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கலந்து கொண்டார்கள் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.


உடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பி.ஆர்.ஓ டாக்டர் .மனோகர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர். பூஜைக்கான ஏற்பட்டினை திருவண்ணாமலை மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *