வத்தல்மலை வழியாக கோம்பேரி காளிகரம்பு வரை புதிய தார்சாலை அமைக்கும் இடத்தை தருமபுரி எம்பி மணி ஆய்வு
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சி, கோம்பேரி தொடக்க ப்பள்ளிக்கு கிழக்கே, பாப்பிரெட்டிப் பட்டி தாலுகா பொம்மிடி அடுத்த காளிகரம்புக்கு மேற்கு இடைப்பட்ட பகுதியில், வத்தல்மலை தொடர் சிறியதாக செல் கிறது.இம்மலைத்தொட ரில், காளிகரம்பு ராமசாமி கோயிலில் இருந்து கோம் பேரி தொடக்கப்பள்ளி வரை 1,500 மீட்டர் நீளம் நடைபாதை உள்ளது.
கோம்பேரிதுவக்கப்பள்ளி -காளிகரம்பு ராமசாமி கோயில் இடைப்பட்டதூரம், 1,500 மீட்டர் நீளம் மட்டும் சாலை வசதி இல் லாமல் இரண்டு மலைக்கு இடையே பாறை கற்கள் மற்றும் குண்டும், குழியு மாக உள்ளது. வனப்ப குதியில் மட்டும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை தேவைப்படுகிறது.
மொத்தம்சுமார்7கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை தேவைப்படுகிறது. இந்த 7 கிலோ மீட்டர் தூரத்திற் கும் சாலை அமைத்தால், மக்கள் நீண்டதூரம் சுற்றி செல்வது பாதியாக குறைந் துவிடும்.
இந்த வனத்து றைக்கு சொந்தமான வழித்தடத்தின் வழியாக, வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் பவர் கிரிட் மின்கோபு ரம் வழியாக மின்சாரம் செல்கிறது. இதனால் இந்த பகுதியின் வழியாக பொது மக்கள் பயன்படுத்தும் தார் சாலையாக செல்ல தடையாக பவர்கிரிட், வனத்துறை உள்ளது.
இந்நிலையில், தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி, பொதுமக்கள்அளித்த கோரிக்கையின் பேரில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனி யப்பனுடன், வனத்துறை யின் வழியாக தார்சா அமைக்கசாத்தியகூறுகள் குறித்து நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
தடையாக இருந்த பவர் கிரிட் நிறுவனத்திடம் பேசி பொதுமக்கள் பொதுவ ழியாக பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது. மேலும் பவர் கிரிட்டிடம் தடையில்லா சான்று பெறப்பட்டது. அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வனத்துறை அனுமதி பெறு வற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, ஒன்றிய செயலாளர் சக் திவேல், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் நந்தன் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர் வாகிகள், சார்பு அணிக ளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், தோழமை கட்சி நிர்வா கிகள் மற்றும் சுற்றுப்புர பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.