சின்னமனூர் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது பேரூராட்சி மன்ற தலைவர் பாராட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது
குச்சனூர் பேரூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் சிறந்தது ஒரு கல்வி நிறுவனமான குச்சனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குச்சனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் கேடயமும் வழங்கி மனதார பாராட்டினார்
இந்த விருதை பெற்று தேனி மாவட்ட அரசு பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகம் வட்டார கல்வி அலுவலகம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களின் தன்னலமற்ற சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்
மேலும் இந்த விருது பெற்ற பள்ளிக்கு குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி டி ரவிச்சந்திரன் நேரடியாக சென்று நீங்கள் வாங்கிய விருது குச்சனூர் நகருக்கு பெருமை சேர்த்து உள்ளது என்றும் தங்களின் கல்வி சேவை மாணவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து இது போன்ற விருதுகளை தொடர்ந்து வாங்க வேண்டும் என மனதார வாழ்த்தினார்
உடன் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் குச்சனூர் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவர்கள் ஆகியோர் மனதார வாழ்த்தினார்கள்