திருவாரூர் அருகே 22 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் திறந்து வைத்தார் .
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மருத்துவகுடி கிராமத்தில் ரூபாய் 22 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிராமன் திறந்து வைத்தார் இதனை தொடர்ந்து மானந்தகுடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மணவை சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மற்றும் நிர்வாகிகள் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்