கோவையில் ஐ ரோபோசக்ரா சார்பாக நடைபெற்ற சர்வவித்யா திருவிழா ரோபோட்டிக்ஸ் திறனாய்வு இறுதி போட்டியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..

ரோபோட்டிக்ஸ் தொடர்பான திறனாய்வு பயிற்சிகளை வழங்கி வரும் ஐ ரோபோ சக்ரா பயிற்சி மையம்,ஐ.எஸ்.ஆர்.ஓ. (ISRO) அங்கீகாரம் பெற்ற ஸ்பேஸ் டியூட்டராகவும் முன்னணி ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கல்வி நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது..

இந்நிலையில் பள்ளி மாணவ,மாணவிகளின் ரோபோட்டிக்ஸ் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, ரோபோட்டிக் சாம்பியன்ஷிப் எனும் தேசிய அளவிலான ரோபோ சயின்ஸ் போட்டி தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு சுற்றுகளாக நடைபெற்றது..

இந்நிலையில் சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கான இறுதி போட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக விஞ்ஞானி,டாக்டர். கே. கதிர்வேலு, காக்னிசன்ட் இந்திய தலைவர் பாலகுமார் தங்கவேலு,
புரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தின் தலைமை செயல் அலுவலர் அஷ்வின் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

வயது அடிப்படையில்,ரோபோட்டிக் கால்பந்து
ரோபோ ஸ்ட்ராட்டஜி கேம்,ரோபோ கால்ஃப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், 15 சிறந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 45 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன.

இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,ஐ ரோபோசக்ரா நிறுவனத்தின் நிறுவனர் அருண் மற்றும் இணை நிறுவனர் சுஜாதா ஆகியோர் தலைமை தாங்கினார்..

சிறப்பு விருந்தினர்களாக ,ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இடம் சூழல் சோதனை பொறியாளர், பி.ஏ. சுப்பிரமணி, விண்கலம் மின்சாதனப் பிரிவு, தலைவர் வி. ஸ்ரீகுமார் பிரிவு தலைவர், ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர். பிரியா சதீஷ் பிரபு, ,ஆகியோர் கலந்து கொண்டு, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *