கோவையில் சதங்கா ஆர்ட் ஸ்டுடியோவின் இரண்டாவது ஓவிய கண்காட்சி
தத்ரூப ஓவியங்களை கண்ட பார்வையாளர்கள் வியப்பு
கோவையில் செயல்பட்டு வரும் சதங்கா ஆர்ட் ஸ்டுடியோவில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கலை ஆர்வம் கொண்ட அனைத்து தரப்பினரும் ஓவியம் வரைதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இது போன்ற ஓவியர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக சதங்கா ஆர்ட் ஸ்டுடியோ ஒருங்கிணைத்த ஓவிய கண்காட்சி கோவை புரூக் பீல்டு மால் அருகில் உள்ள சோழன் அரங்கில் நடைபெற்றது..
சதங்கா ஆர்ட் ஸ்டுடியோவின் இணை நிறுவனர் ஓவியர் சுபராகினி,கிளை தலைவர் ஓவியர் ஸ்ரீனிவாச வரதராஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி,
சின்மயா வித்யாலயா பள்ளியின் தாளாளர் வேணுகோபால்,பாராதீய வித்யா பவன் பள்ளி முதல்வர் மகேஷ்வரி,சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர் ஜெயலதா,கூட்டுறவு சங்க துணை பதிவாளர் வேணி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்..
கண்காட்சியில்,சுமார் எட்டு வயது முதலான மாணவ,மாணவிகள் வரைந்த சுமார் 80 ஓவியங்கள் இதில் காட்சி படுத்தப்பட்டிருந்தன..
கரிதூள்,வண்ண பென்சில்கள்,கத்தி,போன்றவற்றை பயன்படுத்தி இளம் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின..
சதங்கா ஆர்ட் ஸ்டுடியோவின் இணை நிறுவனரும் ஓவியரும் ஆன சுப ராகினி,மற்றும் அவரது மாணவர்களும் இணைந்து வழங்கிய இந்தக் கண்காட்சியானது ஓவியக் கலையின் பன்முகத்தன்மையை பார்வையாளர்களுக்கு வழங்கியிருந்தோடு, வண்ணமயமிக்க படைப்புகளாக உருவாகி ஓவியக்கூடத்தை அலங்கரித்தன.
இந்த ஓவிய தொகுப்பில் இயற்கை காட்சிகள், வசீகரிக்கும் வனவிலங்குகள், ஆன்மீக ஓவியங்கள், மனித உணர்வுகள் என்று பல்வேறு விதமான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
பள்ளிச்சிறுவர்களின் கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடைபெற்ற இதில் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததோடு அவற்றை விலை கொடுத்தும் வாங்கி சென்றனர்