பிற்படுத்தப்பட்ட சாதியினர்,பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் , ஏழை-எளிய சமூகத்தின் நலனுக்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம்

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உறுதி என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ளது இந்நிலையில் மராட்டிய மாநிலசட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் இந்திய கூட்டணிக்கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளாவது

பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு, அரசியல் சாசனம் அளித்துள்ள இடஒதுக்கீடு மிகவும் முக்கியமானது.
எல்லா நலத்திட்டங்களிலும், பின்தங்கியிருக்கும் சாதிகளுக்கு சிறப்பு கவனம் தேவை, அதற்கான தரவுகள் அரசுக்கு தேவை ஆகையால் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கான நிலையை அறிய சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசிகளுக்கான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான உச்சவரம்பு 50 சதவீதத்தை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *